இந்நூல் கடிதத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இரண்டு கதைகளை உள்ளடக்கியது. இந்நூலில் "ஒரு கடிதத்தின் கதை" மற்றும் "சிவசங்கரி என்கிற சிவசங்கர்" என்கிற இரண்டு கதைகள் உள்ளன. இரண்டும் கடிதத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். ஆனால், வித்தியாசமான கதை அம்சத்துடன் விறுவிறுப்பாக எழுதப்பட்ட கதைகள். முதல் கதையான "சிவசங்கரி என்கிற சிவசங்கர்" என்கிற கதை ஒரு இளம் திருநங்கையின் போராட்ட வாழ்க்கையை ஒரு கடிதத்தை மையமாக வைத்து நவரசங்களும் சொட்ட சொட்ட எழுதப்பட்ட கதையாகும். இரண்டாவது கதையான "ஒரு கடிதத்தின் கதை" என்ற கதை 'அர்ஜீன்' என்கிறவனின் வாழ்வில் ஒரு கடிதத்தின் மூலம் நிகழும் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக எடுத்துக் கூறும் வகையில் எழுதப்பட்ட கதையாகும். இந்த கதையில் ஆங்காங்கே சில கவிதைகள் இடம் பெற்று உங்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! மொத்தத்தில் இந்த நூல் வாசிப்பவர்களின் நவரசங்களையும் தூண்டிவிட்டு உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்று தாராளமாக கூறலாம். கண்டிப்பாக இந்நூலை வாசிக்க தவற வேண்டாம்.
Oru Kadithathin Kathai
- Prathap
- a. Items are non refundable and cannot be cancelled once order is placed.